ரூ.40 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்..!

கோவை அருகே வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில்தணிக்கை செய்தபோது மொத்தம் ரூ 40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாடல் செய்யப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தர் தனலட்சுமி, முன்னாள் எழுத்தர் பேச்சியண்ணன், உதவியாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வணிக குற்றப்புலனாய்வு போலீசார் கடந்த 9-9-2000அன்று வழக்கு பதிவு செய்தனர் .இதை யடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை 4-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையை நடத்திய நீதிபதி அருண்குமார் குற்றம் சாட்டப்பட்டகூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தனலட்சுமி பேச்சியண்ணன், மகேந்திரன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 21 ஆயிரம் அபராதமும்விதித்து தீர்ப்பு கூறினார்.