வீட்டிலிருந்த ரூ. 40 லட்சம் திருட்டு. வேலைக்காரப் பெண் மீது புகார்..

கோவை ஏப்25

கோவை செல்வபுரம் ,அசோக் நகர் ,அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கலாவதி ( வயது 43) இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் கலாவதிக்கு ரூ12 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வந்தது .மேலும் அவரது வீட்டை விற்பனை செய்த பணம் ரூ26 லட்சம்சேர்த்து மொத்தம் 40 லட்ச ரூபாயை புது வீடு வாங்குவதற்காக வீட்டில் படுக்கை அறையில் “டிரங்க்” பெட்டியில் பூட்டி வைத்திருந்தார்.அந்த பணத்தை  காணவில்லை .இது குறித்து கலாவதி செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் செல்வபுரத்தைச் சேர்ந்த வடிவேல் மனைவி நதியா ( வயது 28)என்பவர் அவரது வீட்டில் வேலை செய்து வந்ததாகவும், அவர்தான் அந்த பணத்தை திருடி இருக்கலாம் என்று கூறியுள்ளார் .இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நதியாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..