சென்னையை தலைமை இடமாக கொண்டு ஐ .எப். எஸ்.நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு
89, ஆயிரம் பேரிடம் ரூ. 6ஆயிரம் கோடி வசூலித்து ஐ.எப்.எஸ். நிறுவனம் மோசடி செய்தது. இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி.கபிலன் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பொருளாதார குற்றபிரிவு ஏ.டி,ஜி.பி. தினேஷ் மோடாக் உத்தரவிட்டுள்ளார்.