கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோடு எல்.ஐ.சி .காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசீம். அவரது மனைவி மும்தாஜ் ( வயது 30) இவர் நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கோவை செட்டி வீதி கே. ஜி. தோட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் அறிமுகம் ஆனார். ஆன்லைன் மூலம் வரத்தகம் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணம், 8 பவுன் நகை ஆகியவற்றை வாங்கி மோசடி செய்து விட்டார். இது குறித்து மும்தாஜ் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் ஆனந்த் பாபு மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.