எண்ணெய் மில் அதிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி- 2 பேர் கைது.!!

கேரள மாநிலம் மலப்புரம் பெரிய மாத்தூரை சேர்ந்தவர் ஜோபி வர்கீஸ் (வயது 46) தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் பல்வேறு இடங்களுக்கு எண்ணை அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு தொழில் ரீதியாக கோவை குனியமுத்துரை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை மேலாளர் வில்சன் ராபின் ( வயது 38 ) என்பவர் அறிமுகமானார். கடந்த ஜூன் மாதம் 200 டின் தேங்காய் எண்ணெய் அனுப்பி வைக்குமாறு ஜோபி வர்க்கீடம்,வில்சன் ராபின் கேட்டார். இதை யடுத்து ஜோபி வர்கீஸ் ரூ.7லட்சத்து17ஆயிரம் மதிப்புள்ள 3,300 லிட்டர் தேங்காய் எண்ணெய்டின்களைசரக்கு வாகனத்தில் கோவைக்கு அனுப்பி வைத்தார் .அதனைப் பெற்றுக் கொண்ட வில்சன் ராபின் (ரூ 1 லட்சம் மட்டும் ரொக்கமாகவும், மீதமுள்ள பணத்திற்கு காசோலைகளையும் ஜோபி வர்கீஸ்சிடம் கொடுத்தார்.அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது பணமில்லாமல் திரும்பியது. இதை யடுத்து ஜோபி வர்கீஸ், வில்சன் ராபினை தொடர்பு கொண்டு ,காசோலை திரும்பி வந்துவிட்டது எனவே பணத்தைஅனுப்பி வைக்குமாறுகேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இது குறித்து ஜோபி வர்க்கீஸ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எண்ணெய் வாங்கிக் கொண்டு ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் மோசடி செய்ததாக தனியார் நிறுவன விற்பனை மேலாளர் வில்சன் ராபின் அவருக்கு உடந்தையாக இருந்த குனியமுத்தூரை சேர்ந்த மேலாளர் அந்தோணி ( வயது 45) ஆகிய 2 பேரைநேற்று கைது செய்தனர் .மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த குனியமுத்தூரை சேர்ந்த முகமது ஷெரீப் என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.