கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 30 இவரது தந்தை முருகன் என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையாராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த கலைசங்கர் (வயது 36) என்பவரிடம் நட்பு ஏற்பட்டது. அப்போது கலை சங்கர் தனக்கு சென்னையில் அரசு பெண் உயர் அதிகாரி ஒருவரை நன்றாக தெரியும். எனவே உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்.அரசு பணியில்உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய முருகன் தனக்கு தெரிந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதன்படி 10க்கு மேற்பட்டவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி கலை சங்கரிடம் கடந்த 20 22- 23 ஆண்டு காலகட்டத்தில் ரூ. 77 லட்சத்தை முருகன் கொடுத்துள்ளார். அதற்கு கலை சங்கர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு முத்தரையுடன் கூடியஅலுவலக உதவியாளர்,இளநிலை உதவியாளர்ஆகிய பணிக்கான நியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக முருகனிடம் முறையிட்டனர். போலியான பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்ததை அறிந்த முருகன் தன்னிடம் வாங்கிய ரூ 77 லட்சத்தை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதற்கு உடந்தையாக சாந்தி, கனகமணி உள்ளிட்ட இருந்துள்ளனர். இதற்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முருகன் உடல் நல குறைவால் இறந்துவிட்டார்.எனவே அவரது மகன் கார்த்திக் கிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். அவர் இது தொடர்பாக கோவை மாநகர குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கலை சங்கர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று முன் தினம் அவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்த மோசடி வழக்கில் துறை ரீதியாக எடுத்த நடவடிக்கையால் கலைச்சங்கர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.