பூந்தமல்லி : ராமாபுரத்தில் கஞ்சா விற்ற 3 லாரி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் ராமாபுரம் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 3 நபர்களை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.சோதனையில் அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது 3 பேரிடம் விசாரித்த போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் 3 பேரும் ராமாபுரம் பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் (வயது 23) மாரிமுத்து (வயது 27) சதீஷ் (வயது 25) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனததையும் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரும் லாரி டிரைவர்களாக வேலை செய்து கொண்டு கஞ்சா விற்றது தெரிய வந்தது.
இதுபற்றி ராமாபுரம் ராயாலா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ,கைது செய்யப்பட்ட 3 பேரையும் , பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..