கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை – இளைஞர் கைது..
தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி சோதனை சாவடி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், தடாகம் உதவி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அந்த இளைஞரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய ப விசாரணையில், பிடிபட்ட நபர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் (21) என்பது தெரியவந்தது.
ஜேசிபி ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர், கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த மோகனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சோதனை சாவடிக்கு அருகிலேயே கஞ்சா விற்பனை நடந்து வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.