ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

சென்னை: சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..

முதல்கட்டமாக சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை ரூ 60 அதிகரித்து, பிறகு, ரூ 100 முதல் ரூ 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியை யாரும் பதுக்கி வைக்கக் கூடாது என உத்தரவும் போடப்பட்டுள்ளது. எனினும், தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்தவாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது..

ஆனால், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது.. வெளிசந்தைகளிலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.68-க்கு விற்பனையானது. பிறகு, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60 ஆனது.

தக்காளி விலை உடனடியாக இறங்குமுகத்தில் சென்றதால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.. எனினும், தக்காளி விலை உச்சத்துக்கு சென்றுவிட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையாகி வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உள்ளனர்..

இந்நிலையில்தான், ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக தக்காளிவே தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது… ரூ.70-க்கு விற்கப்பட்டு, ரூ.100-க்கி விற்பனையாகிறது. ஒரு சில இடங்களில் 170 ரூபாய்க்குகூட தக்காளி விற்கப்படுவதாக சொல்கிறார்கள்.

தக்காளி வரத்து குறைந்துள்ளதால்தான், தக்காளி விலை உயர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.. மேலும், வரத்து குறைவு, கோடை மழை உள்ளிட்ட காரணங்கள் தக்காளி விலை உயர்வு என்று காரணம் தெரிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகிறார்கள். தக்காளி விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் பெரிய கருப்பன், ரேஷனில் தக்காளி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படியே நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சொன்னதாவது:

“அகில இந்திய அளவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. அதனால், அந்த விலையை கட்டுபடுத்த பண்ணைப் பசுமைக் கடைகளை போல ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 25 ரேஷன் கடைகள், தென்சென்னையில் 35 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 22 என பிரித்து சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் மொத்தமாக 111 கடைகளில் குறைந்தது 50 முதல் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும். விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும், இந்த திட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். அந்தவகையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையாவதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு சென்னைவாசிகளிடம் நிலவி வருகிறது.