சூலூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் அறுவை சிகிச்சை..!

சூலூர் அரசு மருத்துவமனையில் தாராபுரம் பகுதியில் ஹோட்டல் கடையில் வேலை செய்யக்கூடிய சண்முகம் என்பவர் கால் வழுக்கி கொதிக்கும் எண்ணெயில் கையை முழுவதும் விட்டுவிட்டார் கை முழுவதும் வெந்த நிலையில் சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் கையில் இருந்த பாதிக்கப்பட்ட தசை முழுவதும் அகற்றப்பட்டு அவர் உடலின் தொடையிலிருந்து தசைகள் எடுக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எந்த ஒரு பாதிப்பும் இன்றி குணப்படுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை சூலூர் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக கை முன்பு இருந்த நிலையிலேயே சரி செய்யப்பட்டதற்கு நோயாளி சண்முகம் மற்றும் அவரது மனைவி செல்வி கண்ணீர் மல்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கஜேந்திரனுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனைக்கு வருகை தந்த கோயம்புத்தூர் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் சூலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வாணி மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கஜேந்திரன் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். நோயாளியை நேரில் சென்று சிகிச்சை குறித்தும் தற்போது உள்ள நிலை குறித்தும் கேட்டு அறிந்தார். தற்போது அரசு மருத்துவமனைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இதுபோன்ற புறநகர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அறுவை சிகிச்சை அரங்கு , மருத்துவ உபகரணங்கள், வழங்கப்பட்டு இருக்கிறது மேலும் மருத்துவமனையின் தேவைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய மருத்துவத்துறை முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் அரசு மருத்துவமனையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கஜேந்திரன் கூறுகையில் நோயாளி மருத்துவமனைக்கு வரும்பொழுது கை முழுவதும் வெந்த நிலையில் காயங்களுடன் வருகை தந்தார் உடனடியாக அவரை அட்மிட் செய்து தீவிர அவசர பிரிவில் முதல் கட்ட மருத்துவ சேவை செய்யப்பட்டது . தொடர்ந்து அவருடைய தோள்கள் முழுவதும் கொதிக்கின்ற எண்ணெய் விட்டதால் சுருங்கி வெந்து விட்டது. அந்த தசைகளை அப்புறப்படுத்தி பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அவருடைய தொடை பகுதியில் இருந்த தோல் எடுக்கப்பட்டு சேதம் அடைந்த பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருடைய எலும்புகள் பழையபடி இயக்க நிலையில் இருப்பதற்கு தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட்டு அவருடைய கை பழைய நிலையிலே இயங்கும் அளவுக்கு கோயமுத்தூர் புறநகர் பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஆலோசனைகளையும் உதவியும் செய்த மருத்துவ தலைமை மற்றும் என்னோடு அறுவை சிகிச்சை பணியில் இருந்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.