கோவை கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை , சிங்கை வள்ளி கும்மியின் 8-ம் ஆண்டு விழா பீளமேட்டில் நடைபெற்றது. முருகன் -வள்ளி திருமணத்தின்
போது ஆடப்பட்ட வள்ளி கும்மி,கிருஷ்ண பகவானின் கோலாட்டம், கருப்பராய சாமிக்கு உரிய பெருஞ்சலங்கை ஆட்டம்,பெண்ணை தெய்வமாக நினைத்தாடும் ஒயிலாட்டம், அனைவரையும் ஆட வைக்கும் ஜமாப் ஆட்டம் ஆகிய 5 கலைகளை சிங்கை வள்ளி கும்மி குழுவினரால் விழாவில் ஆடப்பட்டது.
தொடர்ந்து 5 மணி நேரம் ஆடி அசத்தியவர்களை பொதுமக்கள் பாராட்டி உற்சாகப்படுத்தினர். மேலும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் கின்னல் சாதனை முயற்சி இந்நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டது. விழாவில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நிர்வாகி நித்யானந்தன், துணை கலெக்டர் சுரேஷ், கொங்கு ஆய்வாளர் ஆதன் பொன் செந்தில் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கை கலை குழு நிர்வாகிகள் பழனிசாமி, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.