டிப்பர் லாரியில் மணல் கடத்தல் – டிரைவர் தப்பி ஓட்டம்.!!

கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி புவி இயலாளராக பணிபுரிந்து வருபவர் சந்தியா அந்தோணி மேரி. இவர் நேற்று கிணத்துக்கடவு, காரச்சேரி, மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மணல் உரிமம் இல்லாமல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. அதைக் கடத்தி வந்த காரச்சேரியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் சுரேஷ் (வயது 40) தப்பி ஓடி விட்டார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..