கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாயில் ஆதித்யா வித்யா ஸ்ரம் குருகுலம் பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் பழமை வாய்ந்த சந்தன மரம் வளர்ந்து வந்தது. இந்த மரத்தை நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து 4 அடி உயரத்துக்கு வெட்டி சென்று விட்டனர் . இது குறித்து அந்தப் பள்ளியின் பொறுப்பு அதிகாரி ராம்குமார் சதாசிவம் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை பள்ளி வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்..!
