சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்..!

பாஜக கூட்டணியில் தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனுடன் நேற்று பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் தனதுஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோருடன் வந்து, வி.கே.சிங், கிஷன் ரெட்டி, அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது, ‘முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எங்கள் தரப்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என்பது குறித்து பாஜக குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக பாஜக குழு கூறியிருக்கிறது’ என்றார்.

இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனை பாஜக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால்,அவர் திருச்சியில் இருந்ததால், அவரை மாநிலதலைவர் அண்ணாமலை, கிஷன் ரெட்டி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசினர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த சரத்குமார், தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்துள்ளார். பாஜகவுடன் இணைந்தது சமகவின் முடிவல்ல என்று கூறிய அவர், இது மக்கள் பணிக்கான தொடக்கம் எனவும் தெரிவித்தார். 2007ல் சமகவை சரத்குமார் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

வருங்கால இளைஞர்களின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளேன் எனவும் கூறினார்