ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பிரேம் சுதா, வட்டார இணைச்செயலாளர்கள் கல்யாணி, அம்சா மற்றும் பவானிசாகர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்..
சத்தியமங்கலம் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!
