தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் பிரகாஷ் டீக்காராமன் அமர்வு இனி வேலுமணி மனு குறித்து விசாரணை நடத்தும்.