கோவையில் பிரதமரின் வாகன பேரணியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்பு – அதிகாரிகள் விசாரணை.!!

கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சாய்பாபா காலனியில் இருந்து ஆர் .எஸ் .புரம். வரை வாகன பேரணி தேர்தல் பிரச்சாரம் செய்தார் அல்லவா? அப்போது மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் 50 பேர் திரண்டு நின்று வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தெரியவந்தது. அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளை ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் விதிமுறை உள்ளது. இதை மீறி கோவையில் பள்ளி மாணவிகள் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பு ஏற்படுத்தியது.. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறை இணை ஆணையரிடம் கேட்டுள்ளனர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்..