டிவி பார்த்ததை தாய் கண்டித்ததால்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..

.கோவை பீளமேடு ,சக்தி நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் சாதனா (வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் படிக்காமல் அடிக்கடி டி.வி .பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்தார் .இதனால் மனம் உடைந்த சாதனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.