கோவை மாவட்டம் அன்னூர் எல்லப்பாளையம் அருகே உள்ள சுக்கிரமணி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் விஜயகுமார் ( வயது 35 ) இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் .இது குறித்து அவரது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார் .இதை யடுத்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து அன்னூர் போலீசார் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை – வாலிபர் போக்சோவில் கைது..!
