கோவை மாவட்டத்தில் சாலை ஒர தாபா ஓட்டல்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து குடில்கள் அமைத்து அதில் பார்கள் போல மது அருந்த அனுமதிப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்ட முழுவதும் கடந்த 3 நாட்கள் முன்பு தீவிர சோதனை நடத்தினார்கள். இதில் பலர் கைது செய்யபபட்டனர். ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மற்றும் மது அருந்த அனுமதித்த 18 தாபா ஓட்டல்களுக்கு சீல் வைக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார் . இதையடுத்து அன்னூர் கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், சூலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 18 தாபா ஓட்டல்களுக்கு வருவாய் துறை மூலம் சீல் வைக்கப்பட்டது..
கோவையில் சட்ட விரோதமாக மது அருந்த அனுமதித்த 18 தாபா ஓட்டல்களுக்கு சீல் வைப்பு..!
