கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள எஸ் .கைகாட்டி, அம்மன் நகரை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம்.இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 38)இவர் தற்போது மேட்டுப்பாளையம் ஊமைப்பாளையத்தில் வசித்து வருகிறார் இவரது முதல் கணவர் சிவசுப்பிரமணியம்கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்த நிலையில் இரண்டாவதாக கோத்தகிரி குமரன் காலனியை சேர்ந்த பிரபாகரன் ( வயது 38) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்..இவர் குடிப்பழக்கம் உடையவர் .தினமும் குடித்து விட்டு வந்து மகாலட்சுமியிடம் தகராறு செய்வார்.
இதனால் மகாலட்சுமி மேட்டுப்பாளையம் ஊமப்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த பிரபாகரன் அவரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் மகாலட்சுமி புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்மகாராஜா வழக்கு பதிவு செய்து பிரபாகரனை நேற்று கைது செய்தார் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.