சீக்ரெட் ஓனர் மோடிஜி அவர்களே… உங்க பெயரை சொல்ல எனக்கு பயமா..? அனல் பறக்க பேசிய விஜய்.!!

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் அவர், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடனே நேரடி போட்டி இருக்கும் என்று உறுதியாகக் கூறினார்.

மேலும் தன்னுடைய உரையில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்த விஜய், “சீக்ரெட் ஓனர் பிரதமர் மோடிஜி அவர்களே. உங்கள் பெயரை சொல்ல எங்களுக்கு பயம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் மத்திய ஆட்சி என்னும் காரணத்தைக் கண்டிப்பாக வெளிப்படையாகச் சொல்கிறோம். தமிழ்நாடு தமிழர்களைக் கண்டு ஏன் அலர்ஜி?” என கேள்வி எழுப்பினார். மேலும், ஜிஎஸ்டி வசூலுக்குத் தமிழ்நாட்டை முழுமையாக பங்கேற்க வைத்தபோதிலும், கல்விக்கான நிதியோ, திட்டங்களுக்கான நிதியோ சரிவர ஒதுக்கப்படுவதில்லை என்றார்.

விஜய் தொடர்ந்து கூறுகையில், “குழந்தைகளின் கல்விக்கே நிதி இல்லை; ஆனால் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறார்கள். தமிழ்நாடு பல மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய மாநிலம். தமிழ்நாட்டை பாதுகாப்பது எங்கள் உரிமை மட்டுமல்ல; கடமையும் கூட” என தெரிவித்தார். மாநிலத்தின் உரிமைகளை பாதுகாப்பது தவெக கட்சியின் முதல் கடமையாக இருக்கும் என்றும், மக்கள் நலத்துக்காகவே அரசியலில் தங்களை ஈடுபடுத்தியுள்ளோம் என்றும் கூறினார். அவரின் இந்த அரசியல் நியாயீனம், தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.