கல்லூரி மாணவர்களிடம் செல்போன் பறிப்பு – 3 பேர் கைது..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் ,புதுவஞ்சேரியை சேர்ந்தவர் பிஜி குமார். இவரது மகன் மிதுன்ஜித் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் அபிஜய்யுடன் உக்கடம் லாரி ஒனர்ஸ் அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகே நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் இவர்களை மிரட்டி 2 செல்போனை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.. இது குறித்து மிதுன் ஜீத் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து சவுரிபாளையம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 27) வெள்ளலூர் சையத் ச அபுதாகீர்(வயது 20) உக்கடம் ஜி. எம். நகர் பவுரு தீன் (வயது 31) ஆகியோரை கைது செய்தார். 2 செல்போன்கள் மீட்கப்பட்டது..