வால்பாறை அருகே காடம்பாறை நீர்மின் சக்தி உற்பத்தி மையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 28 தொழிலாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வேலையில் இருந்து நீக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து மின்சார வாரியம் மேல்முறையீடு செய்தது. அதில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது .இந்த உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகம் செயல்படுத்தாமல் தாமதம் செய்து வந்தது .இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற உத்தரவிட கோரி கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் வக்கீல் ஆனந்தன் மூலம் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அருணாச்சலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் .இதை தொடர்ந்து காடம்பாறை நோக்கி வந்த மின் உற்பத்திக் கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டு கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்காத மின் உற்பத்தி கழக பஸ் ஜப்தி..!
