கோவை கணிமவள அதிகாரிகள் அவினாசி ரோட்டில் பீ ளமேடுஅருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ” கிராவல் ” மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியும் -மணலும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஓட்டி வந்த சின்ன தடாகம், அம்பேத்கார் நகரை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் அஜித் (வயது 30)பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் . போலீசார் அவரை கைது செய்தனர். லாரி உரிமையாளர் அருண் தலைமறைவாகி விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளர் அருணை தேடி வருகிறார்கள்.
மணல் கடத்திய லாரி பறிமுதல் – டிரைவர் கைது..!
