மனிதக் கழிவு கொட்டிய லாரி பறிமுதல்..!

கோவை அருகே உள்ள மாவுத் தம்பதி ஊராட்சி, வாளையார் அருகே உள்ள ஓடையில் மனித கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதாகவும் ,அவை கேரளாவில் இருந்து ” செப்டிக் டேங்க் ” சுத்தம் செய்யும் லாரியில் கொண்டு வரப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் மனித கழிவை கொட்டும் வாகனங்களை கையும் களவுமாக பிடிக்க ஊராட்சி மன்றம் – நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் திட்டமிட்டனர். அதற்காக தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வாளையார் அருகே தமிழக பதிவு எண் கொண்ட லாரியில் கொண்டு வந்த மனிதக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அந்த பகுதி மக்களை திரட்டி சென்றுஅந்த லாரியை சிறை பிடித்தனர். இது குறித்த தகவலின் பேரில் கே. ஜி. சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். டிரைவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.