பள்ளி-கல்லூரிகளுக்கு அருகே பீடி ,சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் அங்குள்ள தெலுங்கு வீதியில் ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பீடி, சிகரெட்டுகள் மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .இதுதொடர்பாக வியாபாரி செந்தில் குமார் (வயது 36 )கைது செய்யப்பட்டார் .
இதே போல ராஜவீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே ஒரு கடையில் நடத்தப்பட்ட சோதனையில் பீடி, சிகரெட் இருந்தது தெரிய வந்தது .இது தொடர்பாக அதன் உரிமையாளர் சசிகுமார் (வயது 42 )கைது செய்யப்பட்டார். உக்கடம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு கடையில் பீடி,சிகரெட் விற்பனை செய்ததாக அப்துல் ( வயது 22 )கைது செய்யப்பட்டார். ராஜவீதியில் உள்ள ஆசிரியை பயிற்சி கல்லூரி அருகே ஒரு கடையில் பீடி – சிகரெட் விற்றதாக ஒண்டிப்புதூர் சக்தி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 50) கைது செய்யப்பட்டார். உக்கடம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் பீடி விற்றதாக குனியமுத்தூர் வசந்த மாளிகை சேர்ந்த உமர்பாரூக் (வயது 39 )கைது செய்யப்பட்டார். பீடி, சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.