மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை- வடமாநில வியாபாரி கைது..!

கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சூலூர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி பைலோச்சன் பிஸ்வால் மகன் சத்யபிரதா பிஸ்வால்(34) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 2 கிலோ 250 கிராம் கஞ்சா சாக்லேட் பறிமுதல்செய்யப்பட்டது.இந்த சாக்லேட்டுகளை பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வட மாநிலத்திலிருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.