கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று பி.என்.புதூர் ,பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) 50 கிலோ மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக வடகோவை நேதாஜி ரோட்டை சேர்ந்த வியாபாரி சுரேஷ்குமார் (வயது 37 ) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து குட்காவும் ,இருசக்கர வாகனம் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போலஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் கரும்புக்கடை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 400 கிராம் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக பெட்டிக்கடை நடத்தி வந்த உக்கடம், அன்பு நகரை சேர்ந்த அபுதாகிர் (வயது 47) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து இரு சக்கர வாகனம் . செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது..