கேரளா லாட்டரி டிக்கெட் விற்பனை – பெண், முதியவர் உட்பட 5 பேர் கைது.!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்டு கேரள மாநில லாட்டரிடிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்ததாக பொள்ளாச்சி |பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்த பேச்சுமுத்து ( வயது 65) கைது செய்யப்பட்டார். லாட்டரி டிக்கெட்டுகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல தடாகம் – ஆணைகட்டி ரோட்டில் கணுவாய் பஸ் நிலையம் அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக பொங்காளியூர் ரகுபதி (வயது31) கைது செய்யப்பட்டார். 20 லாட்டரி டிக்கெட்களும், பணமும் 1200 பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் லாட்டரி டிக்கெட் விற்றசிறுமுகை ரோடு கரட்டுமேடு ரங்கசாமி மனைவி லட்சுமி ( வயது 35) கைது செய்யப்பட்டார். லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி நல்லூர் வனப்பகுதி சோதனை சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சேலம் மேச்சேரியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 46) கைது செய்யப்பட்டார். 37 லாட்டரி டிக்கெட் பரிமுகம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு லாட்டரி டிக்கெட் டிக்கெட் விற்றதாக பொள்ளாச்சி சின்னம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 72) கைது செய்யப்பட்டார் .24 லாட்டரி டிக்கெட் பணம் ரூ. 200 பறிமுதல் செய்யப்பட்டது.