கோவையில் தடையை மீறி மது விற்பனை – 7 பேர் கைது..!

கோவை செப்டம்பர் 18மிலாடி நபியையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடஅரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த உத்தரவை மீறி காந்திபுரம் ,சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம்அருகே மறைத்து வைத்துமது விற்றதாக தேவகோட்டை கருப்பையா ( வயது 32) கைது செய்யப்பட்டார். 14 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்மேடு ,தடாகம் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்த வேல்முருகன் ( வயது 32 )கைது செய்யப்பட்டார்..25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கணபதி எப்.சி ஐ. ரோடு டாஸ்மாக் கடை அருகே மதுவிற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் பொன்னாகுளத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 32) 37 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம், விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மாதவன் (வயது 36) கைது செய்யப்பட்டார் 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தண்ணீர் பந்தல் ரோடு,ஹோப் காலேஜ் சந்திப்பு, ராமானுஜம் நகர் ஆகியபகுதியில் நடத்திய வேட்டையில் சிவகங்கை மாவட்டம் சேகர் (வயது 42) புதுக்கோட்டை மாவட்டம் ( சுரேஷ் 38) தர்மபுரி மாவட்டம் சக்திவேல் (வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து33 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.