ஆட்டோவில் லாட்டரி டிக்கெட் விற்பனை – டிரைவர் கைது..!

கோவை காட்டூர்காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11-வது வீதியில் ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவில் இருந்து லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது – இது தொடர்பாக ரத்தினபுரி, திருவள்ளூர் விதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆபிரகாம் லிங்கன் (வயது 56) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கேரளா லாட்டரி டிக்கெட் ,செல்போன் ஆட்டோ பணம்,ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.