கோவை : காவல்துறையினர் தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி மகிழ்வாக செயல்படுவது குறித்த கருத்தரங்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.பேராசிரியை முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் பெண் போலீசாரும் பங்கேற்றனர்.பெண் காவலர்களின் கேள்விகளுக்கு பேராசிரியை ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் பதில் அளித்தார்.பேராசிரியை ஜெயந்தஸ்ரீக்கும்,அவரது கணவர் பாலகிருஷ்ணனுக்கும். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கதர் ஆடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னதாக ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் சேகர் வரவேற்று பேசினார். முடிவில் துணை போலீஸ் கமிஷனர் சுகாசினி நன்றி கூறினார்..