சூலூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு.!!

சூலூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அனைத்து பகுதிகளும் அதிகமாக உள்ளது கோயமுத்தூர் மண்டலத்திலும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக கோவை மக்களுக்கு வழங்கப்படக்கூடிய பில்லூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததின் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது .இதன் காரணமாக சூலூர் பேரூராட்சியில் குடிநீரை சேமித்து வைக்காத பகுதிகளுக்கு மக்களின் தேவையை கருதி சூலூர் பேரூராட்சியில் துரித நடவடிக்கையாக வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது தொடர்ந்து நீரின் தட்டுப்பாடு அதிகரிக்கின்ற காரணத்தால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட கேட்டுக்கொண்டு வருகின்ற குடிநீரை அனைத்து மக்களுக்கும் சென்றடைய வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கிணற்று நீரை தினத்தோறும் விநியோகித்து மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்ற வகையில் விநியோகிக்க செயல் அலுவலர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.