சட்டசபையில் கடும் அமளி… குண்டுகட்டாக வெளியேற்றபட்ட அதிமுகவினர்.!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்துக்கு பிறகு நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து மதுரை உசிலம்பட்டி விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு கொண்டு வந்து பேச முயற்சித்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, பேரவை தொடங்கப் போவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தான் எனது அறையில் ஒரு பொருள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு கேட்கப்பட்டது. இருந்த போதும் பேரவையில் பேசுவதற்கு முன்னதாக எனது அனுமதி பெற வேண்டும் நான் மரபு என்று சபாநாயகர் தெரிவித்தார்.

அனுமதி தராத விவகாரத்தை பேரவையில் பேச அனுமதிக்க கூடாது என்று அவை முன்னவர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். எதிர்க்கட்சி கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்பதைப் போல கூறமாட்டேன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.சபாநாயகரை நோக்கி கைகளை நீட்டி பேசக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் செயல்படக்கூடாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதனையடுத்தும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவை காவலர்கள் கொண்டு உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அவை மரபுகளைமீறியதன் காரணமாக ‌ அவை நடவடிக்கைகளில் இன்று ஒரு நாள் முழுவதும் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதிப்பதாகவும் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார் . இதையடுத்துயடுத்து அவை கவலர்கள் அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையிலிருந்து வெளியேற்றினார்கள். இதே நேரம் ஓபிஎஸ் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பேரவையின் நடவடிக்கையில் பங்கேற்றனர்