பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்- நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்கு..!

பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்- நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்கு..!  பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள புது வேலுசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் துரை கணேஷ், இவரது மனைவி சுசித்ரா ( வயது 40 )இவர் கோவை பீளமேடு ஹோப் காலேஜ், ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் அவருக்கு மார்க்கெட்டிங் நிர்வாக டைரக்டர் பதவி வழங்கப்பட்டது.மாதம் ரூ 70 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறினார்கள் .இதை நம்பி சுசித்ரா ஆகஸ்ட் 20 21 முதல் செப்டம்பர் 20 22 வரை அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதன் பின்னும் அவர்கள் அவருக்கு சரிவர சம்பளம் கொடுக்கவில்லை. இது பற்றி கேட்டபோது அந்த நிறுவனத்தினுடைய மேனேஜிங் டைரக்டர்கள் சுதாகர், சின்ன காளி ஆகியோர் அவருக்கு செக்ஸ் டார்ஜர் கொடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து சுசித்ரா பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தி மேனேஜிங் டைரக்டர்கள் சுதாகர் | சின்ன காளி ஆகியோர் மீது கொலை மிரட்டல், மானபங்க முயற்சி உட்பட 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.