8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தூய்மை பணியாளர் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் அந்த சிறுமி புத்தாடை அணிந்து வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாள். அப்போது கண்ணம் பாளையம் ,காமராஜ் நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் வடிவேல் (வயது 41) என்பவர் அங்கு வந்தார். அந்த சிறுமியிடம் நீ அணிந்துள்ள ஆடை மிகவும் நன்றாக உள்ளது என்று நைசா பேச்சு கொடுத்தார். இதையடுத்து சிறுமியை அங்குள்ள கழிவறை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இது குறித்து பெற்றோர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடிவேலை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..