7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 16 வயது சிறுவன் போக்சோவில் கைது.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர் . சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டார் . அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார் .இது குறித்து புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்..