கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற அருண்குமார் ( வயது 28) இவர் கோவை மாநகர கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்..
சிறுமிக்கு பாலியல் தொல்லை – வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!
