கோவை :தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கட்டிட தொழிலாளி. இவர் வேலை தேடி கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஒண்டிபுதூருக்கு வந்தார். அங்கு கூலி வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து வசித்து வந்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது .நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயது, மற்றும் 6 வயதில் இரு மகள்கள் உள்ளனர். பின்னர் அந்த பெண்ணை தொழிலாளி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார் .அந்தப் பெண்ணும் கூலி வேலைக்கு சென்று வந்தார் .இந்த நிலையில் மனைவி வேலைக்கு சென்ற பின்னர் 9 வயது சிறுமிக்கு வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது பற்றி வெளியே சொல்லக்கூடாது. என மிரட்டி உள்ளார் . அந்த சிறுமி மிரட்டலுக்கு பயந்து தன் தாயிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டார். இந்த நிலையில் தனது சகோதரியை வளர்ப்பு தந்தை மிரட்டுவதை பார்த்த 6 வயது சிறுமி தனது தாயிடம் வளர்ப்பு தந்தை சகோதரியிடம் நடந்து கொள்ளும் செயல்பாடுகளை கூறியுள்ளார். இது குறிதத புகாரின்பேரில் கடந்த 20 21 ஆம் ஆண்டில் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடததி தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரு 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.