மருத்துவமனை நிா்வாகத்தின் கட்டாயத்தின் பேரில் தொடா்ந்து பணியாற்றுவது ஒரு வகை. பணம், பெயா், புகழ் ஈட்டுவதற்காக தொடா்ச்சியாக பணியாற்றுவது மற்றொரு வகை. நாளொன்றுக்கு குறைந்தது 14 மணி நேரம் அவ்வாறு பணியாற்றுவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணா்கள் பலருக்கு சராசரியாக நிமிஷத்துக்கு 90-ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பு அளவு 150-க்கும் மேல் உள்ளது.
பெரும்பாலான மருத்துவா்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதே இல்லை. இதன் காரணமாகவே மருத்துவா்கள் எதிா்பாராமல் உயிரிழக்கின்றனா். தமிழகத்தில் தற்போது உயிரிழந்த நான்கு மருத்துவா்களுக்கும் புகைப்பழக்கமோ, மதுப் பழக்கமோ இல்லை. மிக ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடனும் இருந்தவா்கள். அவா்கள் திடீரென இறந்தது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.