ஷாக் நியூஸ்… அமெரிக்காவில் ஜாம்பியாக மாறும் மனிதர்கள்..!!

அமெரிக்காவில் உள்ள மக்கள் தெருக்களில் விசித்திரமாக நடந்து கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் நடந்த விசித்திரமான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

குறிப்பாக சைலாசின் (xylazine) அல்லது ஜாம்பி மருந்து எனப்படும் புதிய போதை மருந்து அமெரிக்கா முழுவதும் பரவி மக்களை வித்தியாசமாக நடந்துகொள்ள தூண்டுகிறது.

பிலடெல்பியா நகரத்தில் இந்த சைலாசினால் பலர் பாதிக்கப்பட்டு ஜாம்பி போன்று வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர். இந்த சைலாசின் பவுடர் இதயத் துடிப்பைக் குறைத்து, உங்கள் சுவாச மண்டலத்தை மெதுவாக்குகிறது மற்றும் நரம்பு மண்டலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்க நேரிடலாம். இதனை உட்கொண்ட பிறகு நிமிர்ந்து நிற்கவோ அல்லது சரியாக நடக்கவோ முடியாது. இந்த போதைப்பொருள் உடல் சருமங்களை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது.

இது தோலில் சீழ் வடியும் புண்களை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உறுப்பு துண்டிக்கப்படும் அளவுக்கு சென்றுவிடும் என்றும் இதற்கு மாற்றுமருந்தே கிடையாது எனவும் அறிவியல் ஆராய்ச்சியாளராகள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே, பிலடெல்பியாவில் மக்கள் விசித்திரமாக தெருவில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, பிலடெல்பியா நகரத்தில் சைலாசினால் அதிகரித்து வரும் அபாயம் குறித்து வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.