ஷாக் நியூஸ்… இனி கட்டட அனுமதி கட்டணம் 2 மடங்காக உயர்வு.!!

சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன் அறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் புதிதாக வீடு வாங்குவது அல்லது கட்டுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், சொத்து வரி உயர்வு, பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்றவை, சமீப காலமாக அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.குறிப்பாக, கட்டட அனுமதி பெறுவது சவாலாக உள்ளது. உள்ளாட்சியிலும், பிற துறைகளிலும் அதிகாரிகளை கவனிக்க தவறினால், இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. சாதாரண குடியிருப்பு திட்டங்கள் முதல், அடுக்குமாடி கட்டடங்கள் வரை இதேநிலை தான்.கோரிக்கை ஏற்புஇந்நிலையில், கட்டுமான துறையினரின் கோரிக்கையை ஏற்று, சுயசான்று அடிப்படையில், கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் துவக்கியது. இதன்படி, 2,500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையிலான வீடு கட்ட, சுயசான்று அடிப்படையில், ஆன்லைன் வழியே உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்; யாருடைய தலையீடும் இருக்காது என்று கூறப்படுகிறது.இத்திட்டத்தில் கட்டட அனுமதி வழங்க, சென்னையில் ஏற்கனவே இருந்த விகிதங்கள் அடிப்படையில், சதுர அடிக்கு, 56 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என சென்னை மாநகராட்சி பரிந்துரைத்தது.

இதற்கான வரைவு அறிக்கை நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பப்பட்டது.ஆனால், நகராட்சி நிர்வாகத்துறையும், ஊரக வளர்ச்சி துறையும் வெளியிட்ட புதிய கட்டண விகிதங்கள் இதற்கு மாறாக இருந்தன.அதாவது, சென்னை மாநகராட்சியில், சதுர அடிக்கு, 100 ரூபாய்; பிற மாநகராட்சிகளில் சதுர அடிக்கு, 74 முதல் 88; நகராட்சிகளில் சதுர அடிக்கு, 70, 74 ரூபாய் என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன.பேரூராட்சிகளில் சதுர அடிக்கு, 45 முதல் 70 ரூபாய் வரை; ஊராட்சிகளில் சதுர அடிக்கு, 15 முதல் 27 ரூபாய் வரை என்றும் அறிவிக்கப்பட்டன.மாற்றலாம் உள்ளாட்சி அமைப்புகளில், 3,500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு தான் புதிய கட்டணம் என்று பலரும் நினைத்தனர்.ஆனால், ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களையும் மாற்றி அமைக்கலாம் என, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, 3,500 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டட அனுமதி கட்டணங்களும் மாற்றப்பட்டுள்ளன. அதனால் ஏற்கனவே, 8,900 சதுர அடி கட்டடத்துக்கு அனுமதி வாங்க, 4.5 லட்சம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில், தற்போது, 9.5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும் நிலை வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.புதிதாக கட்டட அனுமதி பெற விண்ணப்பிப்போர், இருமடங்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விலையை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை!சுயசான்று முறை கட்டட அனுமதிக்கு, புதிய கட்டணங்கள் அறிவிப்பதாக கூறிவிட்டு, அனைத்து வகை கட்டட அனுமதிக்கான கட்டணங்களும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, 8,900 சதுர அடிக்கு கடந்த மாதம் அதிகாரிகள் வழங்கிய டிமாண்ட் நோட்டீஸ் அடிப்படையில், 4.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது, இதே பரப்பளவு கட்டடத்துக்கு, 9.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் கூடுதல் செலவை, வீட்டின் விலையில் ஏற்றுவதை தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை.