ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சோளிங்கரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக மருத்துவமனைகளில் இருக்கும் பிணவறைகளில் பெரிய ஐஸ் பாக்ஸுகள் இருக்கும். அதாவது பெரிய அளவிலான ப்ரீஸர் இருக்கும்.
முக்கியமாக அரசு மருத்துவமனைகளில் இப்படி அதிக அளவில் ப்ரீஸர்கள் இருக்கும். இந்த ப்ரீஸர்களில் பொதுவாக பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டிய உடல்கள் இருக்கிறது.
அதேபோல் சில ப்ரீஸர்களில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, யாராலும் உரிமை கோரப்படாத உடல்கள் இருக்கும். இது போன்ற உடல்களை யாரும் உரிமை கோரவில்லை என்றால் கடைசியில் போலீசார்தான் உடல்களை பறிமுதல் செய்து, அதற்கு இறுதி சடங்குகள் செய்வார்கள். இந்த நிலையில்தான் ராணிப்பேட்டையில் மருத்துமனை ஒன்றில் இருந்து கெட்ட நாற்றம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை அருகே சோளிங்கரில் இருக்கும் மருத்துவமனையில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த அரசு மருத்துவமனைக்கு வெளியே இன்று காலை கெட்ட நாற்றம் வந்துள்ளது. மருத்துவமனையின் இரண்டு பக்கமும் சுமார் 100 மீட்டர்களுக்கு இந்த நாற்றம் வந்துள்ளது. உள்ளே இருந்த நோயாளிகள் பலர் நாற்றம் தாங்க முடியாமல் வெளியே ஓடி வந்துள்ளனர். அருகில் இருந்த வீடுகளுக்கும் நாற்றம் சென்றுள்ளது.
வயதானவர்கள் பலர் இந்த நாற்றத்தால் அவதிப்பட்டு உள்ளனர். இது ஏன் வருகிறது என்று தெரியாமல் மருத்துவமனை ஊழியர்களும் பதறிப்போய் உள்ளனர். ஏதாவது வாயு கசிவு ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்துள்ளனர். கடைசியில் இது பிண வாடை போல இருந்ததால்.. அங்கு உள்ள பிணவறையில் சோதனை செய்துள்ளனர். உள்ளே திறந்து பார்த்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. காரணம் உள்ளே ப்ரீஸர் வேலை பார்க்கவில்லை.
ப்ரீஸர் வேலை செய்யாத காரணத்தால் உள்ளே இருந்த பிணங்கள் அழுகி உள்ளன. கொத்து கொத்தாக பிணங்கள் அழுகி காணப்பட்டு உள்ளன. கொத்து கொத்தாக பல பிணங்கள் அடுத்தடுத்து அழுகிய நிலையில் கிடைத்துள்ளன. இந்த பிணங்களை கைப்பற்றிய மருத்துவர்கள் அதை பின்னர் பிரீசரை சரி செய்து உடனே உள்ளே வைத்தனர். ப்ரீஸர் காரணமாக அந்த மொத்த பகுதியில் நாற்றம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.