மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு.
குஜராத்தில் மதுவிலக்கு அமல் உள்ள நிலையில் பொடாட் மாவட்டம் மற்றும் சில கிராமங்களில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக சிலர் கள்ள சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 40-க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மேலும் 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிர் இழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கள்ளசாராயத்தில் ரசாயனம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..