சென்னை: சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது.
சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..