அதிர்ச்சி ரிப்போர்ட்… உலகளவில்1.24 லட்சம் ஊழியர்கள் கடந்த 6 மாதத்தில் பணிநீக்கம்..!

கடந்த 6 மாதங்களில் மட்டுமே லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.2020ல் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவில் நடப்பாண்டில் மட்டும் 1.24 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 34 நிறுவனங்களில் இருந்து 8000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது வெளிப்படையான தகவல் மட்டுமே.இதில் இன்டெல் நிறுவனம் 15,000, மைக்ரோசாப்ட் ஆயிரம், யுகேஜி 2200 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சமூக வலைதளமான X க்கு மாற்றாக அறியப்படும் KOO, அதன் அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. வரும் நாட்களில் வேலை இழப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் இது மற்ற ஊழியர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.