கோவையில் உயர் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.!!

கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரையில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் உயர் காவல் அதிகாரிகள் ,பெண் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டினார்..