கோவையில் போலி முகவரியில் சிம் கார்டு விற்பனை- 3 பேர் கைது..!

கோவை மே 19 தமிழ்நாட்டில் உள்ள சிம்கார்டுகள் யார் பெயரில் உள்ளது? ஒரே நபரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. என்பதை கண்டறிய மத்திய தொலைதொடர்பு துறை தனியாக சாப்ட்வேர்களை வைத்துள்ளது. இந்த நிலையில் அந்த சாப்ட்வேர்களை பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நபரின் பெயரில் பல்வேறு சிம் கார்டுகள் வாங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது .அதன் பேரில் கோவை மாநகர மற்றும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள் . அதில் கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 42 )பொள்ளாச்சி தென் குமாரபாளையத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 37 )ராமசுப்பிரமணியன் ( வயது 41) ஆகியோர் ஒரே நபரின் முகவரியை பதிவு செய்து பல சிம் கார்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செந்தில்குமார் ,ராம்குமார், ராமசுப்பிரமணியன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் போலிமுகவரியை பதிவு செய்து அதிக விலைக்கு சிம் கார்டுகள் விற்பனை செய்துள்ளனர். இதில் மாநகரப் பகுதியில் செந்தில்குமார் 254 சிம் கார்டுகளையும், புறநகர் பகுதியில் ராம்குமார். ராமசுப்பிரமணியன் சேர்ந்து 4 பேரின் முகவரியை வைத்து 290 சிம்கார்டுகளையும் விற்பனை செய்துள்ளனர். அதாவது அந்த 3 பேரும் சிம் கார்டு வாங்க வருபவர்களின் முகவரி மற்றும் புகைப்படத்தை முகவரிக்கான சான்று கொண்டு வராதவர்களுக்கும் பதிவு செய்து சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிம் கார்டு ஒருவரின் முகவரியில் இருக்கும் .அதை பயன்படுத்துவர் மற்றொருவராக இருப்பார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..