கோவை : இந்து மக்கள் கட்சி ( தமிழகம்) தேர்தல் பிரிவு மாநில செயலாளர் பதவி வகித்து வருபவர் காலனி ராமசுப்பிரமணியம். இவர் மத வெறியை தூண்டு வகையில் முகநூலில் அவதூறு வெளியிட்டிருந்தாராம். இது குறித்து சிங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி காலனி ராமசுப்பிரமணியம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்..